தூபி உடைப்பு! துணைவேந்தரால் பணிக்கப்பட்டவர்களே நிலைமையை மோசமாக்கினர் – பல்கலை ஊழியர் சங்கம் பிதற்றல்..

0 64

யாழ் பல்கலைக்கழகத்தில் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஊழியர்களை நாளையதினம் தமக்கு ஒத்துழைப்பு நல்குமாறு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது..

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாளைய தினம் வடகிழக்கு தழுவிய முழு ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர் சங்கம்.

எமது பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இறந்தோர் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயமாகும்.

இந்த சம்பவத்தை தெடர்ந்து சமூகத்தில் எழுந்துள்ள உணர்வலைகளை நாம் ஆழமாக புரிந்துள்ளோம்.

சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கட்டங்களை அகற்றுவதற்கு விடுக்கப்பட்ட பணிப்புரை வெளிப்படையான முறையில் பரவலான கலந்தாலோசனை மூலம் அணுகப்பட்டிருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம்.

இந்த பணிப்புரை தொடராக நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தரால் பணிக்கப்பட்டவர்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளனர்.

அன்றைய இரவில் பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்கள் குறிப்பாக எமது அங்கத்தவர்கள் எவராவது
மனித நேய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தால் நாம் மக்களிடம் மன்னிப்பு கோரவும் கடமைப்பட்டுள்ளோம்.

பல்கலைக்கழகமானது சமூகத்துடன் இணைந்து இயங்க வேண்டியது மிகவும் அவசியமாகும். மாறாக நாம் சமூகத்தை புறந்தள்ளி மமதையுடன் செயற்பட முடியாது.

இது தொடர்பில் நாளை திங்கட் கிழமை விடுக்கப்பட்டுள்ள வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாளுக்கு எமது பரிபூரண ஆதரவையும் வழங்குகிறோம்.

எனினும் பல்கலை கழகத்தில் பரீட்சசை கடமைகளில் அதனுடன் இணைந்த கடமைகளில் ஈடுபடும் ஊழியர்களை பரீட்சசைகள் இடம்பெறுமாயின் அதற்க்கு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.