குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் விளக்கமறியலில்

0 228

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் கொள்ளை மற்றும் கசிப்பு உற்பத்தி போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று (27) உத்தரவிட்டார்.

சேனாநாயக்க மாவத்தை, கந்தளாய் பகுதியைச் 49 வயதுடைய ஒருவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக கந்தளாய், முள்ளிப் பொத்தானை போன்ற பிரதேசங்களில் கடைகளை உடைத்து கொள்ளையிட்டமை மற்றும் கந்தளாய் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி செய்தமை போன்ற குற்றச்செயல்களுடன் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.