கோட்டாபய அரசை பகிரங்கமாக மிரட்டும் மைத்திரிபால சிறிசேன.
நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் தமது கட்சி தனித்து களமிறங்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்றய தினம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி.
நாடாளுமன்றத் தேர்தலின் போது எமது கட்சி பாரிய அநீதியை எதிர்கொண்டது.
இந்த அநீதி மாகாணசபை தேர்தலிலும் தொடருமானால் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சில பிரச்சனைகள் உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் ஆளும் கூட்டணியால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு உரிய ஒதுக்கீடுகள் வழங்கப்படாவிட்டால் தமது கட்சி தனித்து களமிறங்கும் என தெரிவித்தார்.
இதேவேளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா, கம்பஹா உட்பட்ட பல இடங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆளும் கூட்டணியினால் அநீதி இழைக்கப்பட்டதாகவும் மைத்திரிபால குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கமைய தமது கட்சி வேட்பாளர் பட்டியலின்படி அனுமதி வழங்கப்பட்டிருந்தால் தற்போது நாடாளுமன்றத்தில் 25 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள்.
ஆனால் தற்போது ௧௪ உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளதாகவும் ஒரு குற்றம் சுமத்தியுள்ளார்.
நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலை புதிய அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வந்ததன் பின்னர் நடத்துவதா அல்லது அதற்க்கு முன்னரே நடத்துவதா என்பது குறித்து அரசு விவாதித்து வருகிறது.
இந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குற்றம் சுமஹ்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.