தங்க நாக்குதுடன் மீட்கப்பட்ட மம்மிகள் – எப்படி பேசியிருப்பார்கள்?…

0 380

எகிப்தில் தங்கத்தினாலான நாக்குகள் வைக்கப்பட்ட மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்தின் டொமினிகன் குழு ஒன்று, அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள ‘தபோசிரிஸ் மேக்னா’ கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே குறித்த ஆராட்ச்சியாளர்கள் கிரேக்க மற்றும் ரோமானிய காலங்களில் பிரபலமாக காணப்பட்ட கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருந்த 16 மம்மிகளை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மம்மிகள் சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமையானவை என அந்த நாட்டு அரசு அறிவித்த்த்துள்ளது.

மீட்கப்பட்ட இந்த மம்மிகள் கல்லறைகளுக்குள் மோசமான முறையில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இறப்புக்கு பின்னரான வாழ்க்கையில் ஒசைரிஸ் கடவுளின் நீதிமன்றத்தில் பேசுவதற்காக நாக்குகளின் வடிவிலான தங்கப் படலம் போன்ற தாயத்துக்கள் சடலத்துடன் புதைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

ஒசைரிஸ் பாதாள உலகத்தின் அதிபதி என்றும் அவரே இறந்தவர்களுக்கு நீதிபதி என்றும் பண்டைய எகிப்தியர்கள் நம்பியதாக கூறப்படுகின்றது..

தற்போது கண்டறியப்பட்டுள்ள மம்மிகளில் ஒன்றின் மீது மூடப்பட்டிருந்த பிளாஸ்டர், கைத்தறி மற்றும் பசை அடுக்குகளால் ஆன மூடியில் பதியப்பட்ட அலங்காரத்தில் கடவுளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதனை இந்த ஆய்வில் ஈடுபட்ட சாண்டோ டொமிங்கோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த தொல்பொருள் ஆய்வாளரான கேத்லீன் மார்டினெஸ் கூறியதாக எகிப்தின் தொல்பொருள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மம்மியின் தலையைச் சுற்றியுள்ள மூடிப் போன்ற அமைப்பில், கிரீடம், கொம்புகள் மற்றும் ஒரு நாக பாம்பை சித்தரிக்கும் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மார்பில், கடவுள் ஹோரஸை சித்தரிக்கும் வகையில் கழுத்தணி போன்ற அலங்காரம் சித்தரிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.