இரத்தக்குழாயில் அடைப்பா? இதனை சரி செய்ய இதோ சில இயற்கை வழிகள்!
இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக இரத்தக்குழாயில் அடைப்பு இருக்கின்றது.
இம்மாதிரியான பிரச்சனையை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கங்கள் போன்றவை தான்.
இப்பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தமனிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒருசில உணவுகளை அன்றாடம் சாப்பிட்டால், நிச்சயம் இதைத் தவிர்க்கலாம்.
தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- அன்றாட உணவில் பூண்டு சேர்த்தால், முதுமையில் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. எனவே தினமும் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
- மாதுளை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் தமனிகளில் ப்ளேக் உருவாக்கத்தின் அபாயத்தையும் குறைக்கும். ஆகவே அடிக்கடி மாதுளையை சாப்பிடுங்கள்.
- சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது, இரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் தமனிகளில் இரத்த உறைவைக் குறைக்கிறது. மேலும் அடிக்கடி சால்மன் மீனை சாப்பிட்டால், இரத்த அழுத்தமும் குறையும்.
- மஞ்சள் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் மற்றும் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே தமனிகள் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் கலந்த பாலைக் குடியுங்கள்.
- ஆலிவ் ஆயில் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவே அன்றாட சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.