துளசி நீரை தொடர்ந்து குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

0 162

துளசி ஆரம்ப காலத்திலிருந்த பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு அற்புத சக்தி படைத்த மூலிகையாகும்.

நமது முன்னோர்கள் காலத்தில் இருந்த துளசி பல நோய்களை தீர்க்கும் ஒரு மூலிகையாக இன்று வரை திகழ்ந்து வருகின்றது.

கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள் துளசி, கற்பூர துளசி என அதிக துளசி வகைகள் உள்ளன.

வைட்டமின் A மற்றும் C,கால்சியம், துத்தநாகம், இரும்பு, லினோலன், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

அதிலும் துளசி நீரை தினமும் குடித்து வருவதனால் பல நன்மைகள் உண்டு. தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • துளசி இலையில் இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதனால் புதிதாக உண்டாகும் நோய் தொற்றுகளை ஆரம்பத்தில் அழிக்கும் தன்மை துளசிக்கு உண்டு.
  • இதை தீர்த்தமாக குடிப்பதன் மூலமாக உங்களுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும், எனவே துளசி இலையை இரவு முழுவதும் நீரில் போட்டு நன்கு ஊற வைத்து காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உங்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • அதைப்போல் துளசி இலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரைக் குடிப்பதன் மூலமாக அவ்வப்போது ஏற்படும் சளி பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
  • துளசி இலை உங்கள் இருதயத்தை பாதுகாக்கும், துளசியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளது. எனவே இது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய தொடர்பான வலிகளை குறைக்கிறது.
  • துளசி இலையில் கிருமிகள் எதிர்ப்பு தன்மை இருப்பட்தினால் உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை முழுமையாக குறைக்கிறது.
  • துளசியில் இருக்கும் எதிர்ப்புத்தன்மை உங்கள் கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. அதேபோல் கல்லீரலில் கொழுப்புகள் உண்டாவதை குறைத்து அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது.
  • உடலில் இருக்கும் கால்சியம் மற்றும் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும் இந்த பிரச்சினையை ஆரம்பத்தில் தடுப்பதற்காக நீங்கள் தினமும் துளசி கலந்த நீரை பருக வேண்டும்.
  • இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைத்து நீரிழிவு பிரச்சனையை தடுக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரை குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் பிஎச் அளவு சமமாகும்.
Leave A Reply

Your email address will not be published.