இயக்குனர் மனோபாலா திடீர் மரணம்! இறப்புக்கான கரணம் என்ன?

0 260

தமிழ் திரைப்பட இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா தனது 69வது வயதில் இன்று சென்னையில் காலமானார்.

கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த மனோபாலா , 1982 ஆண்டு ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இவர் ஆகாய கங்கை, பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான் உள்ளிட்ட 24 படங்களை இயக்கியுள்ளார்.

இதேவேளை ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் மனோ பாலாவின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் தமது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.