ரஷ்யா பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு – ஐ போன்களை பயன்படுத்த தடை

0 181

ரஷ்யாவில் அப்பில் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த அரச அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய இந்த தடை உத்தரவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது

மேலும், அரசு தொடர்பான விவகாரங்களுக்கு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஸ்மார்ட் போன் மற்றும் ஐ போன்களை பயன்படுத்தினால் அவற்றின் மூலம் மேற்கத்தைய நாடுகள் ரஷ்யாவை உளவு பார்க்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

இதனால் அதற்கு பதிலாக இரகசியமாக வேறு மாற்று வழிகளை ரஷ்ய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிர்வாக துறையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இணைய சேவைகளை பயன்படுத்துவதில் அதிகமாக ஈடுபட்டு வரும் புடின் ஸ்மார்ட் போன்களை பயன்டுத்துவதில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.