கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை வடகிழக்கில் அடக்கம் செய்ய அரசு தீர்மானம்.

0 88

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக நிலத்தடியிலிருந்து நீர்மட்டம் மிகவும் ஆழமாக காணப்படும் இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிக்கையும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதன்படி வட மாகாணத்தில் மன்னாரில் உள்ள மறிச்சுக்கட்டி பிரதேசமும் கிழக்கு மாகாணத்தில் எரகம எனும் பிரதேசமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் தரை மட்டத்திலிருந்து சுமார் 30 ஆடி ஆழத்துக்கும் அதிகமான ஆழத்தியிலேயே நீர் காணப்படுகின்றது.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய நிலத்தடியிலிருந்து நீர் மட்டம் ஆழமாக உள்ள இடத்தைக் கண்டுபிடிக்குமாறு என்னிடம் கோரப்பட்டது.

அதன்படி எனது அமைச்சின் புவியியலாளர் ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.

இதற்கமைய குறித்த அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளேன் எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.