வவுனியா மாவட்டத்தின் கோவிட் 19 சமகால நிலமை தொடர்பில் விசேட கூட்டம்
கோவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கபபட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று நடைபெற்றது.
வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கொவிட் 19 தாக்கம் தொடர்பில் வவுனியாவின் தற்போதைய நிலை, மற்றும் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள்,தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மகேந்திரன்,சுகாதாரவைத்திய அதிகாரிகள், பொலிஸார், இராணுவ அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.