ஜனாதிபதியின் தலையீட்டால் தனிமைப்படுத்தல் விடுதி மோசடி நிறுத்தம்

0 223

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான விடுதிகளிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் அதிகளவு கட்டணம் அறவிடும் செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை அவர்கள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு வந்தனர்.

இவ்வாறு தங்கவைக்கப்படும் விடுதிகளில் அதிக கட்டணம் அறவிடும் மோசடியான செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியதுடன் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

அதற்கமைய வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு சில மணித்தியாலங்களுக்குள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.