புதுக்குடியிருப்பில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுவிக்க நடவடிக்கை!

0 251

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்திடம் இருந்த 7 ஏக்கர் காணிகள் நாளை மறுதினம் விடுவிக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் விடுவிக்கப்படும் காணிகள் அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு பின்னர் அது உரிமையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து மக்கள் புதுக்குடியிருப்பில் மீளக் குடியமர்ந்த போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள சுமார் 19 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் மேற்கொண்டார்கள். இதன் விளைவாக ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன. குறித்த காணியில் இராணுவத்தினரின் 682ஆவது படைப்பிரிவு முகாமமைத்துள்ளது.

குறித்த முகாமை கைவேலிப்பகுதிக்கு மாற்றிவிட்டு மிகுதி காணிகள் அனைத்தும் ஆறு மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் விடுவிக்கப்படாத நிலையில் நாளை மறுநாள் 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.