A.30 வைரஸ் தொடர்பில் சுகாதார பிரிவு அவதானத்துடன்
A.30 வைரஸின் நடத்தை மற்றும் இயல்பு தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் ஊடாக வைரஸின் தன்மை பற்றி தீர்மானம் ஒன்றிற்கு வரவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடு மீண்டும் முடக்கபடுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் மக்களின் நடத்தையிலேயே தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் மாத்திரமே நல்ல சூழ்நிலையை எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.