இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகம்

0 107

இலங்கை பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வந்துள்ள முதலீட்டாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்துரைத்த போது

இலங்கைக்கு இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் ஒன்று கடன் மறுசீரமைப்பு. மற்றொன்று,பசுமை வலுசக்தியை நோக்கி நாட்டை வழிநடத்துதல்.

கடன் மறுசீரமைப்புப் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதனால் நாட்டில் பசுமைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவசரமாகச் செயற்பட வேண்டும்.

சூரியசக்தி, காற்றாலை, உயிர் வாயு, கடல் அலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி வலுசக்தியை உற்பத்தி செய்யும் திறன் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதற்கான அனைத்துத் தகுதிகளும் இலங்கைக்கு உள்ளது.

எனவே, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான முக்கிய ஆற்றலாக பசுமைப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தலாம்.

அடுத்த இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வலயத்தின் முதல் பசுமைப் பொருளாதாரக் கொள்கை இதுவாகும்.

பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் அதன் கொள்கையை அறிமுகப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.