தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நெடுந்தூர விசேட பஸ் சேவைகள்

0 106

சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை சூத்திரத்திற்கமைய புதன்கிழமை (29) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதனடிப்படையில், தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களின் நலன் கருதி எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை பகல் மற்றும் இரவு வேளைகளில் நெடுந்தூர விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இவ் அறிவிப்பையடுத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சமாந்தரமாக தாமும் விலைகளைக் குறைப்பதாக ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவித்துள்ளது.

மின்சக்தி அமைச்சில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 400 ரூபாவிலிருந்து 340 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

ஆட்டோ டீசல் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதன் விலை 405 ரூபாவிலிருந்து 325 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. 95 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 510 ரூபாவிலிருந்து 375 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 510 ரூபாவிலிருந்து 465 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. மண்ணெண்ணெய் லீற்றரொன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 305 ரூபாவிலிருந்து 295 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.