சவர்க்கார தூள் மற்றும் திரவ சவர்க்கார பொதிகளுக்கு தடை

0 114

சவர்க்கார தூள் பொதி உறைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடை செய்வதில் அரசின் சுற்றுச்சூழல் துறைகளும் கவனம் செலுத்தியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த வகை சவர்க்கார தூள் மற்றும் திரவ சவர்க்கார பொதிகள் பொலித்தீன் பாவனையை குறைப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கவனம் செலுத்தியுள்ளது.

நீர் நிலைகளில் சோப்பு தூள் பொதி உறைகளை அதிகமாக வீசுவதால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.