மன்னாரில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பொலிஸாரின் ‘கொரோனா’ தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை.

0 62
மன்னாரில் ‘கொரோனா’ தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை பாதுகாக்கும் வகையில்  மன்னாரில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் சுகாதார நடை முறைக்கு அமைவாக சமூக இடை வெளியினை பேணும் வகையில் மன்னார் பொலிஸாரால் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இன்றைய தினம் புதன் கிழமை காலை விழிர்ப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
-மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்க அவர்களின் தலைமையில்,மன்னார் பிரதான பாலத்தடியில் இன்று புதன் கிழமை(2) காலை 8 மணியளவில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது மன்னார் பொலிஸ் பிரிவில் சேவையில் ஈடுபடுகின்ற அனைத்து முச்சக்கர வண்டிகள் பிரதான பாலத்தடியில் ஒன்று சேர்க்கப்பட்டு,குறித்த முச்சக்கர வண்டிகளுக்கு கிருமி தொற்று நீக்கப்பட்டு,விழிர்ப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டது.
-குறிப்பாக முச்சக்கர வண்டிகளுக்கு சமூக இடைவெளியினை பேணி கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க கோரி மீட்டரான வாழ்கை எனும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு ஸ்ரிக்கர் ஒட்டியுள்ளனர்.
சமூகத்தில் நாள்தோறும் வாடிக்கையாளர்கள் பலரை ஏற்றும் போதும் சமூக நடவடிக்கையின் போதும் எப்போதும் ஒரு மீட்டர் இடைவெளியினை கடைப்பிடிக்க முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு ஸ்ரிக்கர்கள் முச்சக்கர வண்டியில் ஒட்டிவைக்கப்பட்டுள்ளது.
-குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுத்கமகே, மன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் ஜெயதிலக,மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave A Reply

Your email address will not be published.