இலங்கைக்கான 480 மில்லியன் டொலர் கொடுப்பவு இரத்து – உறுப்புரிமையையும் நீக்கியது அமெரிக்கா
அமெரிக்காவின் எம்.சி.சி ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு இரத்துச் செய்யப்படவுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற எம்.சி.சி பணிப்பாளர் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த ஒப்பந்தத்தின் கீழ் பயன்பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை எம்.சி.சியின் நிதியினை இரத்த்துச் செய்தாலும் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது.
அத்துடன் இலங்கை சிறந்த நட்பு நாடாக தொடர்ந்தும் காணப்படும் என தெரிவித்துள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையில் கொரோனாவை எதிர்கொள்வதற்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.