மன்னாரில் நத்தார் திருவிழாவை முன்னிட்டு விசேட நல்லிணக்க நிகழ்வு

0 33

“மத ரீதியான உரிமைகளை சக மதத்தவர்களுடன் இணைந்து வெற்றி கொள்வோம்” எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் நல்லிணக்க நிகழ்வும்.

கொரோனா விழிர்ப்புணர்வு செயற்பாடும் மன்னார் பள்ளிமுனை பாரம்பரிய நினைவுச்சின்னமான பெருக்க மர பகுதியில் மெசிடோ நிறுவனத்தின் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை 11 மணியளவில் இடம் பெற்றது.

நாடளாவிய ரீதியில் மதங்களுக்கு இடையில் காணப்படும் கசப்புணர்வுகளை எதிர் கால தலை முறையினர் மறந்து நல்லிணக்க ரீதியில் மத சுகந்திரத்தை பயன்படுத்தும் விதமாக மும் மத சிறுவர்களையும் இணைத்து குறித்த நிகழ்வு இடம் பெற்றது .

குறித்த நிகழ்வில் பள்ளிமுனை கிராம மக்கள், மெசிடோ நிறுவன ஊழியர்கள், சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் மும் மதங்களை சேர்ந்த சிறுவர்களால் நல்லிணக்க சின்னமான புறாக்கள் பறக்கவிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.