சுகாதார தரப்பினரை மீறி கொரனா தொற்றாளர்களின் பெயர் விபரம் பொதுவெளிக்கு சென்றது எவ்வாறு? – விசாரணை நடத்துவாரா வட மாகாண ஆளுனர்
வவுனியாவில் இன்று கொரனா தொற்றாளர்கள் 54 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களின் பெயர் விபரம் அடங்கிய விபரக்கொத்து சுகாதார தரப்பினரை மீறி எவ்வாறு பொது வெளிக்கு சென்றுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கொறனா தொற்றாளர்கள் தொடர்பாக சுகாதார தரப்பினர் மற்றும் பொலிஸாரே விடயங்களை கையளா வேண்டிய நிலை உள்ளது.
தொற்றாளர்களின் முகத்தினை வெளிப்படுத்தும் வகையில் படங்களை பிரசுரித்தல் மற்றும் வீடியோ காட்சிகளை வெளிப்படுத்தல் தவறாக காணப்படுகின்றது.
இந்நிலையில் வவுனியாவில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களது பெயர், வயது,ஆண், பெண், அடையாள அட்டை இலக்கம் முகவா, தொலைபேசி இலக்கம் என்பன உள்ளடங்கிய விபர கொத்து பொது வெளியில் வெளிவந்துள்ளது.
இதன் காரணமாக இன்று முகப்புத்தகம் உட்பட பலவற்றியலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையினால் குறித்த தொற்றாளர்களின் அரகசியத்தன்மை மீறப்படுவதுடன் அவர்களது தனிப்பட்ட வியடங்களான தொலைபேசி இலக்கம் மற்றும் அடையாள இட்டை இலக்கம் என்பனவும் பகிரங்கப்படுத்தப்பட்டள்ளது.
இதனால் கொரனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் மனவிரக்திக்குள்ளாகும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே குறித்த விபரக்கொத்து எவ்வாறு பொது வெளிக்கு சென்றது. இதற்கு சுகாதார தரப்பினர் காணரமா என வட மாகாண ஆளுனர் மற்றும் கொரனா ஒழிப்பு செயலணி, சுகாதார அமைச்சு விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.