இராணுவத்தினருக்கு அறிவு இல்லை நா.உ செல்வராஜா கஜேந்திரன் தெரிவிப்பு.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போனமைக்கு சுகாதார விவகாரங்களில் இராணுவத்தினர் தீர்மானங்களை எடுக்கும் நிலைமை உருவாக்கியமையே காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
கோவிட் தொற்றினால் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
இதனால் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
அத்துடன் கோவிட் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியாதுள்ளமை இந்த செயற்பாடுகளை கையாளும் முக்கிய பதவிகளில் இராணுவம் அமர்த்தப்பட்டுள்ளமையே காரணமாகும்.
இராணுவத்தினருக்கு சுகாதார அறிவு கிடையாது. சுகாதார துறையினர் இருக்கும் குழுவில் ஒரு இரு இராணுவத்தினர் நியமிக்கப்பட்டால், அதில் ஒரு நியாயம் உள்ளது.
ஆனால் இராணுவத்தின் தலைமையில் கொரோனா கட்டுப்பாட்டு குழு இருப்பது அடிப்படை தவறாகும்.
தீர்மானம் எடுக்கும் முடிவுகளை சுகாதார அதிகாரிகள் எடுக்க முடியாத நிலைமையே தற்போது நாட்டில் நிலவுகின்றது. எனவே இராணுவ மயப்படுதலினால் அச்சமே நிலவுகின்றது.
அதேபோல் சுகாதார அமைச்சர் பொறுப்பற்ற செயற்பாடுகளை கையாளுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.