உக்ரைன் மீதான போர் பிற பகுதிகளுக்கும் பரவும் – ரஷ்யா மிரட்டல்

0 272

உக்ரைன் மீதான போர் பிற பகுதிகளுக்கும் பரவுவதற்கான அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளதாக ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.

நேட்டோ அமைப்பின் 31வது உறுப்பு நாடாக பின்லாந்தும் இணைந்துள்ளது.

நேட்டோ தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது பின்லாந்து இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.  

பின்லாந்து ஏற்கனவே ரஷ்யாவுடன் ஆயிரத்து 340 கி.மீ கிழக்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.

இதன்மூலம் நேட்டோ அமைப்பு நாடுகளுடன் ரஷ்யா பகிர்ந்துகொள்ளும் எல்லை இரட்டிப்பாகியுள்ளது.

இந்த நிலையில் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளதால் நேட்டோ படைகள் தேவைப்பட்டால் பின்லாந்து எல்லைக்கு அனுப்பப்படலாம்.

இது ரஷ்யாவுக்கு பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே பின்லாந்து நேட்டோவில் இணைந்து கொண்டமைக்கு ரஷ்யா தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு

உக்ரைன் போர் பிற பகுதிகளுக்கும் பரவுவதற்கான அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பெலாரஸ் நாட்டின் போர் விமானங்கள் அணு ஆயுதங்கள் ஏந்தி தாக்குதல் நடத்தும் வகையில் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

ரஷ்ய அமைச்சரின் இந்த கருது மூலம் பின்லாந்து மீது ரஷ்யா போர் தொடுக்க முடிவு செய்துவிட்டதான அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்ய படைகள் தீவிரமாக உள்ள நிலையில் இந்த நிலைமை பின்லாந்து மீதும் திரும்புமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அத்துடன் பின்லாந்து மீது தாக்குதல் நடத்தினால் நேட்டோ உறுப்பு நாடுகள் களத்தில் குதிக்கும்.

இதனால் சர்வதேச அரங்கில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது..

Leave A Reply

Your email address will not be published.