கொரோன பீதியில் உள்ள இலங்கை மக்களுக்கு அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு.
கோவிட் 19 தடுப்பூசி அடுத்த வருடம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கென வழங்கப்படும் தடுப்பூசியை நாட்டுக்கு எடுத்து வருவதற்கான அடிப்படை நடவடிக்கை தொடர்பில் தற்போது திட்டமிடப்படுகிறது.
எனினும் தற்போது உலகளவில் பல நாடுகளும் பலதரப்பட்ட தடுப்பூசிகளை வெளியிட்டு பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் வௌியிடப்பட்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் நன்கு ஆராய்ந்த பின்னர் பொருத்தமான தடுப்பூசியை கொண்டு வர நடவடிக்கை எடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.