இலங்கையை அச்சுறுத்தப் போகும் புதிய இஸ்லாமிய அமைப்பு..
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புதிய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு ஒன்று உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலனாய்வு பிரிவினர் இந்த விடயம் தொடர்பில் அறிக்கையிட்டுள்ளதாகவும் அதனை ஆதாரமாக கொண்டு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடடயம் தொடர்பில் புலனாய்வு பிரிவினை விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
30 உறுப்பினர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு மருத்துவர் ஒருவர் தலைவராக செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் 30 உறுப்பினர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு மருத்துவர் ஒருவர் தலைமை தாங்குவதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் குறித்த அமைப்புக்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நிதி வழங்கப்படுவதுடன் இணையத்தளம் மூலம் பிரசார நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் குறித்த சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.