மலையக சொந்தங்களின் கண் துடைக்க இன்று அடித்தளம் இட்ட புலம்பெயர் உறவுகள்..
வரலாற்று ஆரம்பமாக புலம்பெயர் தமிழர்களினால் வருடப்பிறப்பான இன்று மலையக சொந்தங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கடவுள்களும்,மதங்களும்,புனிதம் என கொண்டாடப்பட்டவைகளும் தராத புரிதல்களை ‘2020’ ஒவ்வொரு தனி மனிதருக்கும் கொடுத்துள்ளது.
அவற்றை நினைவில் நிறுத்தி 2021-ஆம் ஆண்டின் அற நெறி பணிகளின் பயணம்
நுவரெலியா மாவட்டத்தில் முதன் முறையாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் நகரில் இருந்து நோர்வூட் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் உள்ள நிவ்வெளிகம பகுதியிலேயே இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தீக்கிரையாகிய சுமார் 12 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் 45 குடுமபங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கி வைக்கப்பட்டது.
இவர்களிற்கான கற்றல் உபகரணங்களை பரததர்சனா வாழ்வாதார உதவி நிறுவனம் ஊடாக செல்வி. ச.கவிதா(Germany) .தனது பிறந்த நாள் பரிசாக வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.