தனது அசாத்திய திறமையால் ஸ்வீடன் விருது பெற்ற தமிழக சிறுமி

0 1,342

சூரிய ஒளி மூலமாக இயங்கும் நடமாடும் இஸ்திரி வண்டியை வினிஷா உமாசங்கர் என்ற 14 வயது மாணவி கண்டுபிடித்துள்ளார். மாணவியின் இந்த கண்டுபிடிப்பிற்கு ஸ்வீடன் நாட்டில் ‘மாணவர் பருவநிலை விருது’ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதானது, சுற்றுச்சூழல்-பருவநிலை பிரச்னைகளுக்கு வருங்கால தலைமுறையினர் நன்மைக்காக புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் 12 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சர்வதேச விருதாகும்.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியைச் சேர்த்த உமாசங்கர், சங்கீதா என்ற தம்பதியின் மகளான வினிஷா உமாசங்கர், தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இவருக்குச் சிறு வயது முதலே அறிவியலின் மீது அதிக ஈடுபாடு இருந்து வருகிறது.

“என்னுடைய 5வது பிறந்தநாளின் பொது எனது பெற்றோர் விண்வெளி கலைக்களஞ்சியம் பற்றிய புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினர்.

                                                                                                              அதைப் படித்ததிலிருந்து எனக்கு அறிவியலின் மீது ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. அதை தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை குறித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆர்வம் காட்டினேன்” என்று கூறுகிறார் மாணவி வினிஷா உமாசங்கர்.

Leave A Reply

Your email address will not be published.