சிப் மூலம் வீடியோ கேம் விளையாடும் குரங்கு

0 343

நியூராலிங்க் என்னும் தொழில்நுட்பம் மூலம் தலையோட்டில் பொருத்தப்பட்ட சிப் மூலம் குரங்கொன்று வீடியோ கேம் விளையாடுவதை சாத்தியப்படுத்தியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப தொழில் முனைவோரான ஈலோன் மஸ்க் இதனை தெரிவித்துள்ளார்.

நியூராலிங்க் என்னும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயற்பட்டு வருகின்றது.

ஈலோன் மஸ்கின் இந்த நிறுவனம் மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், குரங்கு ஒன்றின் தலையோட்டில் சிறு ஒயர்களை கொண்ட சிப் போன்ற ஒயர்லெஸ் (கம்பியில்லாமல் தகவலை கடத்தும்) கருவியை பொருத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(31) ஆன்லைன் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஈலோன் மஸ்க் இந்த தகவலை தெரிவித்திருந்தார்.

இதன்படி “நியூராலிங்க் நிறுவனத்திடம், தலையோட்டில் (Skull) சிறு ஒயர்களுடன் கூடிய கம்பியில்லா கருவி பொருத்தப்பட்ட குரங்கொன்று உள்ளது” என்று கூறியிருந்தார்.

அதாவது, மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங்க் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை இந்த குரங்கின் வாயிலாக பரிசோதித்து வருகின்றனர்.

“உங்களால் அந்த சிப் எங்கு பதியப்பட்டுள்ளது என்பதை காண முடியாது.

அது மிகவும் மகிழ்ச்சியான குரங்கு” என்று கூறிய மஸ்க், இந்த திட்டம் குறித்த மேலதிக அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.