சிறார்களின் துவிச்சக்கர வாகன பயண அனுபவத்தை பேசும் ‘பாராசூட்’ எனும் இணைய தொடர்

0 208

நடிகர் கிஷோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பாராசூட் ‘எனும் இணைய தொடரின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த இணைய தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளியாகிறது.

இயக்குநர் ராசு. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாராசூட்’ எனும் இணைய தொடரில் கிஷோர், ‘குக் வித் கோமாளி” புகழ் கனி, காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன், பவா செல்லதுரை மற்றும் கிருஷ்ணா குலசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த இணைய தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்திற்காக நடிகரும், தயாரிப்பாளருமான கிருஷ்ண குலசேகரன் தயாரித்திருக்கிறார்.

இந்த இணையத் தொடரில் சிறார்கள் அவர்களுடைய தந்தையின் துவி சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

இதன் போது அவர்களுக்கு கிடைக்கும் அனுபவத்தை அனைத்து தரப்பு பார்வையாளர்களும் ரசிக்கும் வகையில் இணைய தொடராக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக இந்த இணையத் தொடரின் கிளர்வோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.