இந்து ஆலயம் தகர்க்கப்பட்டு மேற்கொள்ளப்படும் ஆய்வில் தமிழர்களையும் இணைக்க வேண்டும் – சாள்ஸ் எம்.பி கடிதம்.

0 289

குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு ஆராய்சியில் துறைசார்ந்த தமிழர்களையும் இணைத்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குருந்தூர்மலையில் ஆதிசிவன் ஐயனார் கோவிலை காலா காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் இந்து ஆலயத்தின் அடையாளங்களை அழித்ததுடன் அப் பகுதியில் தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து அகழ்வு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பகலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க ஆகியோருக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வைத்தார் .

அந்த கடிதத்தில்

உங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் ஆலோசனையில் 2021.01.18 அன்று அகழ்வு பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைகப்பட்டதுடன் தாங்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டீர்கள்.

அதன்போது இந்துக் கடவுளின் அடையாளங்கள் அழிக்கபட்டு இருந்ததுடன் அகழ்வு பணியில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் விரிவுரையாளர்களையோ யாழ் பிராந்திய தொல்பொருள் ஆராய்சி திணைகளத்தின் ஆராட்சி உதியோகத்தர்களையோ

உள்வாங்காமல் ஆரம்பித்தமையினால் தமிழ் மக்களும் நானும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.

ஆராட்சி பணி வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

எனவே யாழ் பல்கலைக்கழகதினரின் தொல்பொருள் பீடத்தினரையும் யாழ் பிராந்திய தொல்பொருள் திணைக்கள ஆராட்சி உத்தியோகத்தர்களையும் இணைத்துக்கொள்ளும்படி தங்களை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Leave A Reply

Your email address will not be published.