அவசர அம்புலன்ஸ் சேவையால் பலனில்லை – ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் விசனம்.
வவுனியாவில் அவசர நோயாளர் காவு வண்டியால் (1990) பலனில்லை என பாடசாலை அதிபர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் க. தனபாலசிங்கம் இந்த குற்றச்சாட்டை முவைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்.
எமது பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு வகுப்பறையில் ஏற்பட்ட திடீர் தலைவலி மற்றும் காய்ச்சல் காரணமாக அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகல் வழங்கப்பட்டது.
எனினும் தகவல் தெரிவித்து அரை மணி நேரத்திற்கு மேலாகியும் அவசர ஊர்தி பாடடசலைக்கு வரில்லை.
அதனைத் தொடர்ந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இச் சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளதாக கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வவுனியாவில் கொரோனா அதிகரித்துவரும் நிலையில் பாடசாலை மாணவர்களின் நலன்களில் சுகாதாரப் பிரிவினர் அக்கறைகாட்ட முன்வரவேண்டும் எனவும் பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.