இலங்கைக்கு எதிரான தீர்மானம் – தமிழர்களுக்கு பச்சை கோடி காட்டிய அமெரிக்கா

0 84

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது.

இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று (புதன்) கூட்டத்தொடரில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக் கூறலை முன்னிறுத்தி ஐ.நா மனித உரிமை பேரவை, முன்வைக்கும் தீர்மானத்துக்கு அமெரிக்க ஒத்துழைப்பு வழங்குகின்றது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் இணைந்துகொள்ள அமெரிக்க மீண்டும் எதிர்பார்த்துள்ளது எனவும் எதிர்பார்த்துள்ளதாகவும் அண்டனி பிளிங்கன் கூறினார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2018 ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.