இறுக்கமான நடைமுறைகளுடன் இன்று ஆரம்பமானது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை.
வடக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 44 ஆயிரத்து 245 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
இவர்களில் 23 ஆயிரத்து 679 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 20 ஆயிரத்து 566 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடக்குகின்றனர்.
அந்த வகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 11 ஆயிரத்து 352 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 11 ஆயிரத்து 130 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 22 ஆயிரத்து 482 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 392 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 ஆயிரத்து 74 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 5 ஆயிரத்து 466 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 919 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், ஆயிரத்து 855 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 4 ஆயிரத்து 774 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
அத்தோடு வவுனியா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 771 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 ஆயிரத்து 860 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 6 ஆயிரத்து 631 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 245 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 ஆயிரத்து 647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 4 ஆயிரத்து 892 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.