கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

0 163

கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று எதிரியின் இலக்கை தாக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இது குறித்து தென்கொரியா கவலை தெரிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை தாங்கி சென்று தாக்கும் வல்லமை கொண்ட இரண்டு ஏவுகணைகளை வடகொரியா மத்திய தீவு பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரையில் கடலுக்குள் செலுத்தி சோதனை நடத்தியதாக தென்கொரிய இராணுவ தளபதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தென்கொரியா மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் இது தொடர்பாக விரிவான பகுப்பாய்வை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, தென்கொரிய பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வட கொரியா, அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் அதன் மீதான பொருளாதார தடைகளை விலக்குவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால் வட கொரியா அணு ஆயுத தயாரிப்பை முற்றிலுமாக கைவிடாததால், அதன் மீதான பொருளாதார தடை நீடிக்கப்படுவதுடன் இரு நாடுகளுக்கிடையிலான அணுஆயுத திட்டம் குறித்த பேச்சுவார்த்தையும் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.