கொரோனாவால் 101,818 பேரின் நிலமை கவலைக்கிடம்

0 211

உலக அளவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத் தொடங்கியுள்ளது.

தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலகம் முழுவதும் இதுவரை 227,252,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,673,481 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 203,937,717 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 18,641,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 18,539,741 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 101,818 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.