இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகள் படகுடன் பறிமுதல்

0 222

´மனோலி´ தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப்படகை இந்திய கடலோரக் காவல் படை, வனத்துறை அதிகாரிகள் நேற்று (19) மாலை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படையினர், கடலோரப் படை வீரர்கள் மற்றும் வன ஊழியர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று (20) கூட்டு ரோந்து சென்றனர்.

அப்போது மனோலி தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நாட்டுப்படகு கைப்பற்ற கடலில் முயன்றனர்.

ஹோவர் கிராப்ட் விரைந்து வருவதை அறிந்த நாட்டுப்படகில் இருந்த 4 பேர் தப்பி ஓடினர்.

பதிவெண் இல்லா நாட்டுப்படகு, அதிலிருந்து கடல் அட்டை மூட்டைகளை மண்டபம் இந்திய கடலோரக் காவல் படை முகாம் கொண்டு வந்தனர்.

மூட்டைகளை பார்த்தபோது அதில் பதப்படுத்தப்படாத பச்சை கடல் அட்டைகள் ஆயிரத்து 500 கிலோ இருந்தன. இக்கடல் அட்டை மூடைகளை மண்டபம் வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல் உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில் வனப் பாதுகாப்பு படை, வன காவல் படை இணைந்து தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடமிருந்த 35 கிலோ கடல் அட்டை மற்றும் 200 கிராம் கடல் குதிரைகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், தேவி பட்டினத்தைச் சேர்ந்த முகமது யாசர் அலி என தெரிந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்து கடல் அட்டைகள் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.