கொவிட்டில் இருந்து மீண்ட ஒருவருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டால் என்ன நடக்கும்?
கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் தடுப்பூசி பெற்ற அல்லது தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மளவிகே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், கொவிட் நோயினை சாதாரண சளி நோயாக கடந்து செல்லக்கூடிய நிலைக்கு மாற்ற வேண்டும் என பேராசிரியர் சாரா கில்பட் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.
உலகின் அனைத்து நாடுகளிலும் டெல்டா உள்ளிட்ட ஏனைய திரிபுகள் 1% வரை குறைவடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.