சுட்டு கொல்லப்பட்டவரின் தாயார் வௌியிட்ட அதிர்சி தகவல்!
எனது பிள்ளையை அடி அடியென அடித்து கொன்று போட்டு சுட்டுப் போட்டார்கள், இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா? எங்களுக்கு நீதி வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தயார் அதிர்சி தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்பாதுகாவர் மேற்கொண்ட துப்பாகி சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலின் வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வீ. தியாகேஸ்வரன் முன்னிலையில் இன்று (01) எடுக்கப்பட்டது.
இதன்போது கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்காக படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தந்தையான வேலுப்போடி மகாலிங்கம், தாயாரான மா. சின்னப்பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போது மட்டக்களப்பு பொலிஸார் பாக்க மாட்டினம். இதனை சிஐடி யிடம் கொடுக்குமாறு நீதவான் தெரிவிக்கின்றார். ஆனால் அதற்கு பொலிஸார் ஒரு பதிலும் கொடுக்கின்றார்கல் இல்லை. இந்த ஆட்டோ காரன் தான் எனது பிள்ளையை கொலைக்கு கொடுத்தவன் அவனுக்கு எல்லாம் தெரியும் அவனை பிடிக்க வேண்டும்.
எனது மகன் படுகொலை செய்யப்படு இன்று 100 நாட்கள் கடந்துள்ளதாகவும் 8 வது தடவையாக வழக்கு தவணை போகின்றது. பொலிஸார் ஒன்றும் தெரிவிக்கவில்லை. எறாவூர் பொலிஸார் தலைமையில் விசாரணை இடம்பெறுகின்றது.
அவர்கள் பணக்கார் அரசியல்வாதி, நாங்கள் ஏழைகள் என்பதால் எதுவும் நடக்கவில்லை. இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா? எனது மகனின் படுகொலைக்கு நீதிவேண்டும் என படுகொலை செய்யப்பட்வரின் தாயாரான மகாலிங்கம் சின்னப்பிள்ளை கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதேவேளை கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் எனபவரே உயிரிழந்துள்ளதை அடுத்து மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.