கடல்நீரை நன்னீராக்கும் சுத்திரிக்கும் நிலையம் திறப்பு

0 232

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் கருத்திட்டத்திலான தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வறுமைக் குறைப்பிற்கான ஜப்பான் நாட்டு நிதியுதவியில் மின்சார விநியோகத்தை அதிகரிக்கும் உதவித் திட்டத்தின் கீழ் நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கு நன்னீர் குடிநீரை வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட கடல்நீரை நன்னீராக்கும் சுத்திரிக்கும் நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று யாழ் நயினாதீவில் உள்ள 07 வட்டராத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திரைநீக்கத்தினை செய்து வைத்து திறந்துவைத்தார்.

இவ் நிகழ்வில் பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவர் மாவட்ட பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சரத்பத்துல,மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,உள்ளிட்ட அதிகாரிகள் கொண்டகுழுவினர்கள் கலந்துகொண்டனர்.

இவ் குடிநீர்த் திட்டத்தில் 150 கன மீற்றர் குடிநீராக்கும் நிலையமாக காணப்படுகின்றது. இதற்காக 187 மில்லியன் ரூபா செலவில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக 5,000 குடும்பங்கள் நன்மைபெறவுள்ளனர். இந்த குடிநீரை 120 ரூபா செலவில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் அவற்றினை ஒரு யூனிட் 10 ரூபாவாக அறவிட்டு நன்னீரை பெற்றுக் கொள்ள முடியும். என நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.