இலங்கை இணையப் போருக்கு தயாராக வேண்டும்! – சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்து

0 223

21ம் நூற்றாண்டின் தேசிய பாதுகாப்பு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை அதன் திறன்களை அதிகரிப்பதன் மூலம் இணையப் போருக்கு தயாராக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நவராத்திரி சிறப்பு பூஜையிலும் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கை இராணுவத்தின் 72வது நிறைவை​யொட்டி தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற இராணுவ கருத்தரங்கில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

21ம் நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பு என்பது இராணுவங்கள் அல்லது விமானங்கள் மேலே பறப்பது பற்றியது அல்ல, அத்துடன், எந்த நாடும் பெரியதோ சிறியதோ அல்ல. அனைத்து நாடுகளும் வல்லரசுகள் அல்லது ஒன்றுமில்லை,

இணையப் போரை சந்திக்க தயார்படுத்தியதன் படி, நாடுகள் தங்கள் நோக்கங்கள், முன்னுரிமைகள், மூலோபாயம் மற்றும் வளங்களை திரட்டுவதற்கான தேவையை தேசிய பாதுகாப்பின் நான்கு தூண்கள் என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டார்.

இதனையடுத்து கேள்விகளுக்குப் பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, உள்நாட்டுப் போர், ராஜீவ் காந்தி படுகொலை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.