சைனோஃபார்ம் தடுப்பூசி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு!

0 213

சைனோஃபார்ம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் தொடர்ந்தும் இருப்பதாக ஒரு புதிய ஆய்வில கண்டறியப்பட்டுள்ளது.

சைனோஃபார்ம் தடுப்பூசியின் நோயொதிப்பு சக்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வின் இது தொடர்பில் தெரியவந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு, செல் உயிரியல் பணிப்பாளர், கலாநிதி சந்திம ஜீவந்தர தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சைனோஃபார்மின் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட 12 வாரங்களுக்குப் பிறகும், கொவிட் வைரஸுக்கு எதிரான டி செல்கள் தொடர்ந்து செயற்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோயெதிப்பு சக்தி குறைவடைவதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவது மற்றும் கவலைக்கிடமான நிலைக்கு செல்வது குறித்து மேலும் ஆய்வு தேவை என்றும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.