சீன நிறுவனத்திற்கு எதிராக மற்றுமொரு தடையுத்தரவு

0 216

தீங்கு விளைவிக்கும் பக்டீரியா அடங்கிய உரத்தை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சீன நிறுவனம், அதன் உள்ளூர் முகவருக்கு மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக இலங்கை உரக் கம்பனி மற்றுமொரு இடைக்கால தடை உத்தரவை பெற்றுள்ளது.

கொழும்பு வணிக நீதிமன்றம் இந்த தடை உத்தரவை வௌியிட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும், குறித்த சீன நிறுவனத்திற்காக திறக்கப்பட்டுள்ள கடனீட்டுக் கடிதத்தின் ஊடாக மத்திய வங்கியினால் எவ்வித கொடுப்பனவும் செலுத்த முடியாது என குறித்த தடையுத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இல 02, வர்த்தக உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சியினால் கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் கோரிக்கையின் பேரில் சீன நிறுவனம் மற்றும் அதன் உள்ளூர் முகவர் கடனீட்டுக் கடிதத்தின் கீழ் எந்தவொரு கொடுப்பனவையும் பெறுவதைத் தடைசெய்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.