வீடு வீடாக செல்லும் ஜனாதிபதி விசாரணைக் குழு
எரிவாயு வெடிப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழு, சம்பவங்கள் பதிவாகிய வீடுகளுக்குச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் எரிவாயு தொடர்பான வெடிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக எட்டு பேர் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி கடந்த 30ஆம் திகதி நியமித்தார்.
அதன்படி, குழு உறுப்பினர்கள் பொலிஸாருடன் இணைந்து சம்பவங்கள் பதிவான வீடுகளுக்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கொட்டாவ, அதுருகிரிய, ஹன்வெல்ல போன்ற பிரதேசங்களில் அண்மையில் எரிவாயு வெடித்ததாகக் கூறப்படும் வீடுகளுக்குச் சென்று அவர்கள் தகவல்களைப் பதிவு செய்துக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் சுமார் 10 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.