வடக்கில் ஏமாற்றும் மோசடி கும்பல்
முகநூல் ஊடாக பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வவுனியா மணிப்புரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தலைமையில் இயங்கும் மோசடி கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் பாவித்த இலத்திரனியல் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என முகநூல் ஊடாக பொதுமக்களை தொடர்புகொண்டு இலட்சக்கணக்கில் பண மோசடி செய்து வருகின்றனர். பொருட்களின் விலையில் முன்றில் ஒரு பங்கை முற்கூட்டியே வங்கி கணக்கிலக்கத்திற்கு செலுத்தினால் பத்து நாட்களில் அப்பொருள் வீடுகளுக்கு வந்து சேரும் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முல்லைத்தீவைச் சேர்ந்த நபரொருவர் தொண்ணூறாயிரம் மதிப்புடைய கெமரா லென்ஸை பெற இவர்களது வங்கிக் கணக்கில் 27600 ரூபாயை வைப்பிட்டுள்ளார். எனினும் பத்து நாட்கள் கடந்தும் கெமரா லென்ஸ் கிடைக்காததால் குறித்த முகநூல் மற்றும் தொலைபேசியை தொடர்புகொண்ட போது அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கபப்பட்ட நபர் தான் வைப்பிலிட்ட கணக்கிலக்கம் பற்றி விசாரித்த போது அவர் வவுனியா மணிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா ராஜேஸ்வரி எனவும் அவர் தலைமையில் குறித்த மோசடிக் கும்பல் இயங்குவதாகவும் தெரியவந்ததையடுத்து பாதிக்கப்பட்ட நபர் இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனவே இதுபோன்ற மோசடிகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் இதுதொடர்பில் அவதானமாக இருக்கவும் இப்பதிவினை அதிகம் பகிருங்கள்.