அணு விஞ்ஞானி படுகொலை இஸ்ரேலுக்கு தொடர்பு உள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு.

0 1,306

ஈரான் நாட்டினுடைய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.                                                                                                                                                இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஸரீஃப், இது ஒரு நாட்டின் ஆதரவுடன் நடந்த தீவிரவாத செயல் என தெரிவித்துள்ளார்.

இரானிய அணுசக்தித்துறை திட்டங்களின் மூளையாக ஃபக்ரிஸாதே இருந்ததாக மேற்கத்திய உளவு அமைப்புகள் கருதுகின்றன.

மேலும், மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை, “இரானிய வெடிகுண்டு உலகின் தந்தை” என்று ராஜீய அதிகாரிகள் அழைப்பதாகவும் கூறப்படுகிறது.

இரான் அரசு, அதன் அணுசக்தி மேம்பாட்டுக்காக யுரேனியம் செறிவூட்டலை பெருக்கி வருவதாக வல்லரசு நாடுகள் கவலை வெளியிட்டு வந்த நிலையில், அந்நாட்டின் அணுசக்தி தலைமை விஞ்ஞானி கொல்லப்பட்டுள்ளார்.

செறிவூட்டப்பட்ட யுரேனியம், அந்நாட்டின் அணுசக்தி சிவில் திட்டங்களுக்கு மட்டுமின்றி ராணுவ அணு ஆயுத திட்டங்களுக்கும் முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது.

ஆனால், அமைதி பயன்பாடுக்கு மட்டுமே தமது அணுசக்தி திட்டம் உள்ளது என்று இரானிய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

2010 தொடக்கம் 2012ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அவற்றின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக இரான் குற்றம் சுமத்திவருகின்றது.

இந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் இரானிய அணுசக்தி திட்டம் தொடர்பாக நிகழ்ச்சியொன்றில் பேசியபோது, ஃபக்ரிஸாதேவின் பெயரை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு குறிப்பிட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்த நிலையிலேயே அவர் அப்சார்ட் நகரில் தனது “பாதுகாவலர்களுடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.                                                    எனினும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும்
ஃபக்ரிஸாதே ஏற்கனவே இறந்துவிட்ட்தாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகமான பி.பி.சி மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.