ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிவிப்பு !!.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துடன் இந்த நீண்டகால தேவையை அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடிந்ததமை பெருமை அளிப்பதாகவும், சட்டத்தின் தாமதங்கள் நீடித்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்திற்கு 06 புதிய நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 14 புதிய நீதிபதிகள் ஆகியோர் நேற்று (01) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய,
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அதன் செயற்பாடுகளை அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து நீக்குவதற்கு உறுதியுடன் இருக்கிறேன்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துடன் இந்த நீண்டகால தேவையை அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடிந்ததமை பெருமை அளிக்கிறது, அதே நேரம் சட்டத்தின் தாமதங்கள் நீடித்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
‘நீதி தாமதமாவது, நீதி பறிக்கப்படுகிறது’ என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி 20 ஆவது திருத்தம் நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க உச்சநீதிமன்ற பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் வலியுறுத்தினார்.
நீதியை, வினைத்திறனாக நிர்வகிப்பது சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது. நீதியை வழங்குவதற்கான செயன்முறைகள் நம்பகமான, வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் பிரச்சினைகளை தீர்த்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு வளம் சேர்க்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வலுவான, வினைத்திறனான மற்றும் சுயாதீனமான நீதி அமைப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. அதன் திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அரசாங்கம் ஆழமான புரிதலைக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.