வவுனியாவில் நீடிக்கும் காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி!!! யாழ் நோக்கி புரவி !!

0 59

புரெவி புயலின் தாக்கம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இரு தினங்களுக்கு காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா. சதானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,

வங்களா விரிகுடாவில் மையம் கொண்ட புரெவி சூறாவளியானது குச்சவெளியூடாக இலங்கையினை கரை கடந்து தற்போது யாழ்ப்பாணத்தினை மையம் கொண்டு மன்னார் ஊடாக வெளியேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வேகமானது மணிக்கு 60 – 80 கிலோமீற்றர் காணப்படலாம்.

குச்சவெளியூடாக யாழ்ப்பாணம் சென்றதினால் வவுனியா மாவட்டத்தில் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் 71.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளதுடன் இந்த சூறாவளியின் தாக்கமானது வவுனியாவில் குறைந்தளவு காணப்பட்டாலும் நாளையதினம் (04) மாலை வரையில் காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு தினங்களுக்கு வவுனியாவில் காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுவதினால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பாடுமாறும் வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா. சதானந்தன் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.