என்னை தூக்கிலிடுங்கள் என தெரிவித்த ரிஷாட் பதியுதீன் – குமுறுகிறார் பா.உ முஷாரப்
ஈஸ்டர் தாக்குதலுக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் தொடர்பு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இன்றய அமர்வில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவருடைய சகோதரனான ரியாத் பதியுதீன் ஆகியோர் தொடர்பிலும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றது.
இந்த நிலையிலேயே ஈஸ்டர் தாக்குதலுக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் தொடர்பு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்தார்.
அத்துடன் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக .புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு பேருந்தில் பொதுமக்களை ஏற்றிச் சென்றார் என்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஈஸ்ரர் தாக்குதலுடன் தொடர்பு படுத்தி எந்த ஒரு வழக்குகளிலும் அவர் கைது செய்யப்படவில்லை எனவும் முஷாரப் சுட்டிக்காட்டினார்.
எனவே அவரை வைத்துக்கொண்டு எவரும் அரசியல் செய்யவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்…(காணொளி)