இலங்கையில் பெப்ரவரி மாதம் முதல் கோவிட் தடுப்பூசி!!

0 36

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராயப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசியானது, குறைந்த மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கு சிறந்த பெறுபேறுகளை வழங்கும் வகையில் அமையும் என தடுப்பூரி ஆய்வுகளை நடத்தும் இலங்கை பூர்வீகத்தை கொண்ட டொக்டர் மஹேஷி ராமசாமி தெரிவிக்கின்றார்.

 

லண்டனிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவுடன் வீடியோ தொழில்நுட்பத்தில் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர், குறித்த தடுப்பூசியை பயன்படுத்த முடியும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

கொவிட்-19 வைரஸ் தடுப்புக்கான மருந்தை கண்டுபிடிக்கும் செயற்பாட்டில் இலங்கையர் ஒருவர் இணைந்துள்ளமையை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

கொவிட்-19 வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர், தான் இலங்கைக்கு வருகைத் தர எதிர்பார்த்துள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானி மஹேஷி ராமசாமி தெரிவிக்கின்றார்.

 

இதேவேளை,  கொவிட்-19 தடுப்பூசியை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இலங்கையில் பயன்படுத்த முடியும் என ஓளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் தரப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.