நல்லெண்ணத்தை இந்தியாவே காட்டவேண்டும்!! அமைச்சர் டக்ளஸ்
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்குமாறு இந்திய மத்திய அரசு கோருகிறது.
நல்லெண்ணத்தை அவர்களே காட்டவேண்டும் என் கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவிற்கு இன்று விஐயம் செய்த அவர் போகஸ்வெவ பகுதியில் மின் இணைப்பு பணியை ஆரம்பித்து வைத்திருந்தார்.
அதன் பின்னர் வவுனியா தனியார் வி்ருந்தினர் விடுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….
எமது மீனவர்களுக்கு பின்னால் கடற்தொழில் அமைச்சர் நிற்பதாகவும் தகவல் வருகிறது.எது உண்மை என்று நீங்கள் தான் தெரியப்படுத்த வேண்டும்.
இந்திய மீனவர்களின் இழுவைப்படகு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளால் எமது வளங்கள் அழிகின்றது. இதனால் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வாழ்வா சாவா என்றவகையில் அவர்கள் கிளர்ந்தெளுந்துள்ளனர். அந்தவகையில் 5 படகுகளையும் 36 இந்திய மீனவர்களை கடற்படை கைதுசெய்துள்ளது. அந்த நடவடிக்கை இன்றும் தொடரும்.
இது தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இந்திய மத்திய அரசு தூதரகம் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது.
அதுவரை நல்லெண்ண நோக்கத்தில் அவர்களை விடுவிக்குமாறு கோரியுள்ளது. நல்லெணத்தை அவர்களே காட்டவேண்டும். ஏனெனில் தொடர்ந்து அத்து மீறி வருவது அவர்களே.
இந்த பிரச்சனையில் இரண்டு நாடுகளிற்கும் இடையில் இருக்க கூடிய நட்பையும் பாதுகாக்க வேண்டும்.எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பார்க்கவேண்டியுள்ளது.
அத்துடன் நானும் ஒரு அரசியல் கைதியாக இருந்து எங்களை நாங்களே விடுவித்தவர்கள்.
1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பு மூலம் யாரையும் நம்பாமல் நாங்களே எம்மை விடுவித்தோம்,பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் எமக்கு பொதுமன்னிப்பு கிடைத்தது.
அந்த ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த ஒப்பந்தத்தின் பிறகு எதனையும் விடுதலைப்போராட்டமாக நான் கருதவில்லை. அன்றிலிருந்து இதனை சொல்லிவருகிறேன்.
எனினும் தவறான வழிநடாத்தலால் அவர்கள் கைதிகளாக இருக்கின்றமையால். அவர்களும் விடுவிக்கப்படவேண்டும்.அதற்கான முயற்சியை செய்வேன்.
அவர்களில் என்னை கொல்லவந்தவர்களும் இருக்கின்றனர். எனக்கு அதிக ஆசனங்களை தந்திருந்தால் இதனை இலகுவாக தீர்த்திருக்கலாம்.
இன்று கூட்டமைப்பினர் குடி போதையில் கூட்டம் நடாத்துவதாக செய்தி வந்திருந்தது. அப்படியான போராட்டங்கள் இருக்கின்ற சூழலையும் கெடுக்கும் நோக்கமே.என்றார்.
குறித்த நிகழ்வுகளில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொணரடனர்.