வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பலரும் வீதியில் நடமாடும் அவலம்: கண்டுகொள்ளாத சுகாதார பிரிவு
வவுனியாவில் இனம்காணப்பட்ட கொரனா தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் என்ற காரணத்தினால் 50 மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிவுறுத்தல்களை மீறி பலரும் வீதியில் நடமாடித்திரிகின்ற அவலம் நடந்தேறி வருகின்றது.
வவுனியாவில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதியொருவர் மற்றும் திருநாவற்குளம் பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது குடும்பத்தினர் கற்குழியில் வசிக்கும் மாணவி என 8 பேர் வரையில் கொரனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த கொரனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என வவுனியாவில் சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், வைத்தியர்கள் என பலர் குடும்பத்துடன் எதிhவரும் 27 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தும் சட்டத்தின் பிரகாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பலரும் சமூக நலன் கருதாது வீதியில் நடமாடித்திரிவதுடன் தனிமைப்படுத்தல் சட்டத்தையும் மீறி செற்பட்டு வருகின்றனர்.
எனினும் இது தொடர்பில் சுகாதார பிரிவினர் அக்கறை கொள்ளவில்லை என பலராலும் விசனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.